ஊரடங்கால் ரயில்வேக்கு வருவாய் இழப்பு - காலி பணியிடங்களை குறைக்க நடவடிக்கை?
ஊரடங்கால் ஏற்பட்ட வருவாய் இழப்பை காரணம் காட்டி, ரயில்வேயில் காலி பணியிடங்கள் குறைக்கும் நடவடிக்கை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான துறைரீதியிலான சுற்றறிக்கை கோட்ட மேலாளர்கள், துறைத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவர்கள் அளிக்கும் பரிந்துரை பட்டியலில் 50 பணியிடங்கள் குறைக்கப்பட உள்ளன. வருவாய் இழப்பை காரணம் காட்டி, மேற்கொள்ளப்படும் பணியிட குறைப்பு நடவடிக்கை பிற பணியாளர்களுக்கு கடும் பணிச்சுமையாவதோடு, அது பயணிகள் சேவையிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என ரயில்வே பணியாளர்கள் தொழிற்சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளது. எனவே, பணியிட குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் தென்னக ரயில்வேயில் சுமார் 4 ஆயிரம் பணியிடங்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Next Story

