கேரளா தங்க கடத்தல் விவகாரம்: ஐக்கிய அரபு தூதரக அதிகாரி பாதுகாவலரிடம் விசாரணை - பாதுகாவலர், தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு தூதரக அதிகாரியின் பாதுகாவலரிடம் விசாரணை நடத்த சென்ற போது, அவர் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா தங்க கடத்தல் விவகாரம்: ஐக்கிய அரபு தூதரக அதிகாரி பாதுகாவலரிடம் விசாரணை - பாதுகாவலர், தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
x
கேரள தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு தூதரக அதிகாரியின் பாதுகாவலராக இருந்த ஜெயகோஷன் என்பவரிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் சென்றனர். அதிகாரிகள் வரும் தகவலை அறிந்த ஜெயகோஷன், வீட்டை விட்டு வெளியேறி வனப்பகுதியில் பிளேடால் தமது கை நரம்பை துண்டிக்க முயன்றுள்ளார். பின்னர், ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெயகோஷனை விசாரணைக்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணைக்குச் சென்ற அதிகாரிகளிடம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெயகோஷன், தங்க கடத்தல் விவகாரத்திற்கும், தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என, கதறியதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்