நோயாளியை 1 கி.மீ. ஸ்ட்ரெச்சரில் தள்ளிச்சென்ற அவலம் - ஆம்புலன்ஸ் வராததால் நேர்ந்த கொடுமை
ஆந்திராவில், நோயாளி ஒருவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து, சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தள்ளிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில், நோயாளி ஒருவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து, சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தள்ளிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்னூல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவரை, மருத்துவர்கள் அருகில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டர் சென்று எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைத்துள்ளனர். இதற்காக, ஊழியர்கள் மற்றும் ஆம்புலன்ஸை அழைத்தும் அவர்கள் வராததால், நோயாளியை அவரது உறவினர்களே ஸ்ட்ரெச்சரில் வைத்து சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தள்ளி சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

