சூடு பிடிக்கும் தங்க கடத்தல் விவகாரம்
கேரள தங்கக்கடத்தல் சம்பவம் சூடுபிடித்துள்ள நிலையில் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்..
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் நேரடியாக சிவசங்கரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றாலும், குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களுடனான நெருக்கம் காரணமாக வழக்கில் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார் ஐஏஎஸ் அதிகாரியான சிவசங்கரன். தங்கக் கடத்தலில் மையமாக அறியப்படும் ஸ்வப்னா சுரேஷூக்கு கேரள ஐடி துறையில் தகுதிக்கு மீறிய பொறுப்பை பெற்றுத் தந்ததில் சிவசங்கரனுக்கு பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. கேரள ஐடி துறையின் செயலாளராகவும், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராகவும் இருந்த சிவசங்கரன், ஸ்வப்னா சுரேஷ் வீட்டிற்கு நேரில் சென்று வரும் அளவுக்கு நெருக்கம் வைத்திருந்தார் என்கின்றனர் விசாரணை அதிகாரிகள்சிவசங்கரனிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய 9 மணி நேர விசாரணையில் ஸ்வப்னா சுரேஷூக்கு தலைமைச் செயலகம் அருகிலேயே, வீடு ஒன்றை தொழிலதிபர் ஒருவர் மூலமாக ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். அந்த வீட்டில் ஸ்வப்னா சுரேஷை பலமுறை சந்தித்து பேசியதாகவும், தொலைபேசியில் அடிக்கடி உரையாடியதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தங்கக் கடத்தல் வழக்கில் தம்மை தொடர்பு படுத்தி குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, ஒரு வருடம் நீண்ட விடுப்பில் சென்றார் சிவசங்கரன். அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் விசாரணைக்குழுவை நியமித்தது கேரள அரசு. செய்தியாளர்களை சந்தித்த கேரள முதலமைச்சர் பினராயிவிஜயன், அகில இந்திய சிவில் சர்வீஸ் சட்டத்தை சிவசங்கரன் மீறியுள்ளதாக விசாரணைக்குழு கண்டுபிடித்துள்ளது என கூறினார். சிவசங்கரன் விசாரணையை எதிர்கொள்ளும் விதமாக பணியிடைநீக்கம் செய்யப்படுவதாகவும், துறை ரீதியான நடவடிக்கைகள் தொடரும் என்றும் கூறினார்
தங்க கடத்தில் வழக்கில் தொடரும் அதிரடி - அரேபிய தூதரக பிரதிநிதி திடீர் மாயம்

அரேபிய நாட்டிலிருந்து தூதரக அலுவலகத்தில் பணிபுரிகின்ற அரபு நாட்டின் பிரதிநிதியான ரஷீத் காமிஸ் அல் அஷ்மியா என்பவரது பெயர் தங்க கடத்தல் வழக்கில் அடிபட்டது. அரேபிய நாட்டிலிருந்து தங்கம் மறைத்து வைக்க பார்சல் அனுப்பியதில் இவரின் பெயரும் வெளிவந்த நிலையில் திடீரென அவர் மாயமானார். தற்போது அவர் துபாயில் இருப்பது தெரியவந்துள்ளது. ஸ்வப்னாவுடன் இவர் அடிக்கடி செல்போனில் பேசியது உறுதியான நிலையில் அரேபிய பிரதிநிதி தப்பிச் சென்றது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது
"தனக்கும் சுவப்னா சுரேஷுக்கும் எந்த தொடர்பும் இல்லை" - கேரள சபாநாயகர் பதவி விலக எதிர்கட்சிகள் கோரிக்கை

தங்க கடத்தல் விவகாரத்தில் தனக்கும் சுவப்னா சுரேஷுக்கும் எந்த தொடர்பும் இல்லை என,கேரள சபாநாயகர் ஸ்ரீ ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.சுவபனா சுரேஷ் , சந்தீப் நாயர் ஆகியோர் இணைந்து நடத்தி வரும் கார் பழுது பார்க்கும் மையத்தை,சபாநாயகர் ஸ்ரீ ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில், சபாநாயகருக்கும் சுவப்னா சுரேஷுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி அவரை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
Next Story

