தங்க கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா கணவருக்கும் தொடர்பா? -
பதிவு : ஜூலை 15, 2020, 05:06 PM
தங்க கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா கடந்த ஜூன் மாதம் முதல் யார் யாரிடம் பேசினார்? என்ற தகவலை தெரிந்து கொள்ளும் வகையில் அவருடைய செல்போன் அழைப்புகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கேரள மாநில அரசியலை புரட்டிப் போட்டிருக்கும் தங்க கடத்தல் விவகாரம் இப்போது பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. இந்த வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷின் கணவர் ஜெய்சங்கரும் கூட்டு சதியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்த நிலையில் அவர் கைதாகவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனிடையே கடந்த 6ஆம் தேதி பிலிப்பைன்சில் இருந்து வந்த கப்பலில் முக கவசங்கள் வந்ததாகவும், அதன் மூலம் ஹவாலா பணம் கைமாறியதாகவும் கைதான ரெமீஸ் மீது புகார்கள் எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஸ்வப்னாவின் செல்போனை பெரிய ஆதாரமாக எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை ஸ்வப்னா யார் யாரிடம் பேசினார் என்பதை தெரிந்து கொள்ள அவரின் செல்போன் அழைப்பு விபரங்களை வெளியிட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கைதான சந்தீப் நாயரின் சகோதரர் ​ஸ்வரூப்புக்கும் கடத்தலில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்திருக்கும் சூழலில் அவரையும் விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே முதலமைச்சர் பதவி விலகக்கோரி சட்டப்பேரவை வளாகத்துக்குள் புகுந்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். 


"ஸ்வப்னாவுடன் சிவசங்கரனுக்கு நட்பு ரீதியாகவே பழக்கம்"- சுங்கத்துறையினர் நடத்திய விசாரணையில் தகவல் 

தங்க கடத்தலில் கைதாகி இருக்கும் ஸ்வப்னா சுரேஷுடன் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனுக்கு நட்பு ரீதியான பழக்கமே இருந்ததாக சுங்கத்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டு என்ஐஏ அதிகாரிகளின் விசாரணை வளையத்திற்குள் உள்ளார். இதனிடையே அவருடன் தொடர்பில் இருந்தததாக கூறப்படும் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் இடையே நட்பு ரீதியான பழக்கம் மட்டுமே இருந்ததாகவும், அவர் மூலம் சந்தீப் நாயர், ஷரித் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து சிவசங்கரனிடம் விசாரணை நடத்தினால் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என்பதால் விசாரணையை தீவிரப்படுத்த சுங்கத்துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் - 4 பயணிகளை பிடித்து அதிகாரிகள் விசாரணை

திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடி மதிபிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

466 views

பிற செய்திகள்

தமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு - உச்ச நடிகர்கள் இடையிலான ஒற்றுமைகள்

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்த சவாலை ஏற்று அதை நிறைவேற்றியும் இருக்கிறார், நடிகர் விஜய்.

4 views

கர்நாடகாவில் வெள்ளத்தில் சிக்கிய குரங்குகள் - தனி பாலம் அமைத்து மீட்பு

கர்நாடக மாநிலம் தாவண்கரே மாவட்டத்தில் பாயும் துங்கபத்ரா நதியில் கடந்த 7 நாட்களாக வெள்ளத்திற்கு இடையே மரங்களில் குரங்குகள் சிக்கிக் கொண்டன.

13 views

ஆந்திராவில் 23 லட்சம் பெண்கள் பயன்பெறும் திட்டம் - முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்

ஆந்திரா மாநிலத்தில் பெண் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதன் மூலம் தன்னம்பிக்கை கொள்ள வைக்கும் நோக்கில் 'ஒய்.எஸ்.ஆர் சேயுதா திட்டம் 2020' முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று தொடங்கி வைத்தார்.

77 views

பாட்டு பாடிய வண்ணம் ஜெய்ப்பூர் திரும்பும் ராஜஸ்தான் காங். எம்.எல்.ஏ.க்கள்

ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் எழுந்த புகைச்சல் அடங்கி உள்ள நிலையில் ஜெய்சால்மர் தங்கும் விடுதியில் இருந்து ஜெய்ப்பூர் புறப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பேருந்தில் பாட்டு பாடிய வண்ணம் மகிழ்ச்சி உடன் திரும்பினர்.

19 views

உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணை தொடங்குவது எப்போது? - நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் ஆலோசனை

உச்சநீதிமன்றத்தில் நேரடியாக, வழக்கு விசாரணை மேற்கொள்வது தொடர்பாக நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட குழு பரிசீலித்து வருகிறது.

8 views

கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைப்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 32 ஆயிரத்து 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.