தனியாருக்கு நிலக்கரி சுரங்கங்கள்? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடுவதற்கு எதிரான வழக்கில் நான்கு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தனியாருக்கு நிலக்கரி சுரங்கங்கள்? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
x
நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடுவதற்கு எதிரான வழக்கில், நான்கு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள 41 நிலக்கரிச்சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விட மத்திய அரசு சமீபத்தில் முடிவு செய்திருந்தது. இதற்கு எதிராக ஜார்க்கண்ட் மாநில அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவால் காடுகளின் வளங்கள் பெரிய அளவில் சுரண்டப்படும் என்றும் பழங்குடியினரின் வாழ்வாதாரத்தையே அது அழித்துவிடும் எனவும் குறிப்பிட்டு இருந்தது. தனியாருக்கு தாரைவார்க்கும் பட்சத்தில் உரிய விலை கிடைக்காமல் போகும் ஆபத்து இருப்பதாக மனுவில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,  நான்கு வாரத்தில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்