ரூ.50 கோடி மதிப்புள்ள மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகள் - மாற்றித் தர நிதியமைச்சருக்கு திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்து உள்ள 50 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய நோட்டுகளை மாற்றித் தரும்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
ரூ.50 கோடி மதிப்புள்ள மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகள் - மாற்றித் தர நிதியமைச்சருக்கு திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கை
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்து உள்ள 50 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய நோட்டுகளை மாற்றித் தரும்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள், ரூ.50 கோடி அளவுக்கு உள்ளது என்றும்,  இதனை மாற்றித் தர வேண்டும் என அப்போது அவர் கோரியுள்ளார். கொரோனா ஊரடங்கால், தற்போது ஒரு நாளைக்கு 12 ஆயிரத்து 500 பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருவதால், தேவஸ்தானத்திற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளதாக சுப்பாராவ் தெரிவித்தார். ரிசர்வ் வங்கி அந்த தொகையை மாற்றித் தரும் நிலையில், தேவஸ்தானத்திற்கான பொருளாதார நெருக்கடி குறையும் என சுப்பாராவ் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்