ஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல் - சிறப்பு நீதிமன்றம் அனுமதி
பதிவு : ஜூலை 14, 2020, 09:01 AM
கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தங்க கடத்தல் தொடர்பாக, பெங்களூருவில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயர் இருவரும் கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. அவர்களுக்கு தொற்று இல்லை என உறுதியானதை தொடர்ந்து, என்ஐஏ காவலில் விசாரிக்க கொச்சி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.  
தீவிரவாத செயல்களுக்காக தங்கம் கடத்தப்பட்டதாகவும்,  கடத்தல் மூலம் நாட்டின் பொருளாதார கட்டுப்பாடுகளை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாகவும் என்ஐஏ தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.  இதுபோல, சந்தீப் நாயரின் வீட்டில் மேற்கொண்ட சோதனையின்போது சிக்கிய, தங்கம் கடத்தல் தொடர்பான பை ஒன்றையும் நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் சமர்ப்பித்தனர். இதையடுத்து, வரும் 21ம் தேதி வரை அவர்களை என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து  நீதிபதி உத்தரவிட்டார்.  இதையடுத்து இருவரையும் என்ஐஏ அலுவலகத்துக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். 


இதற்கிடையே, இந்த விவகாரத்தில், சிக்கியுள்ள ரமீஸ் என்பவரிடம் விசாரணை நடத்தியபோது, தங்க கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தியதாக தெரிய வந்தது. இதுபோல, தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய, பாசில் பரித்தை அரேபிய அரசின் அனுமதியோடு துபாயில் இருந்து வரவழைக்கும் முயற்சியிலும் என்.ஐ.ஏ  களமிறங்கியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

932 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

432 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

417 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

112 views

வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

32 views

பிற செய்திகள்

அமெரிக்க துணை அதிபர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டி

அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.யான கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

8 views

"புதுச்சேரிக்கு கொரோனா நிதியாக மத்திய அரசு ரூ.25 கோடி வழங்கியது" - புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தகவல்

புதுச்சேரி மாநிலத்திற்கு கொரோனா நிதியாக மத்திய அரசு 25 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாகவும் கொரோனா நோயாளிகளுக்கு கூடுதலாக அசைவ உணவு வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ

17 views

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

932 views

"கொரோனா தடுப்பூசியை வாங்கி பயன்படுத்த வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்" - பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

கொரோனா தடுப்பூசியை வாங்கவும் அதை பயன்படுத்தவும் வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

90 views

கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவில் இருந்து வாங்க தேசிய நிபுணர் குழு நாளை ஆலோசனை

கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவிடம் இருந்து வாங்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

189 views

வெங்கய்யா நாயுடுவின் 3 ஆண்டு குடியரசுத் துணைத் தலைவர் பணிக்கால நிகழ்வுகள் புத்தகம் - பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளியிட்டார்

வெங்கய்யா நாயுடுவின் 3 ஆண்டு குடியரசுத் துணைத் தலைவர் பணிக்காலத்தின் நிகழ்வுகள் அடங்கிய புத்தகத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.