பசுமை ரயில்வே என்ற இலக்கை நோக்கி செல்லும் ரயில்வே துறை : 200 மெகாவாட் திறனுள்ள காற்றாலைகளை நிறுவ ரயில்வே துறை திட்டம்

அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு, கர்நாடகா,குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், 200 மெகாவாட் திறனுள்ள காற்றாலைகளை நிறுவ ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
பசுமை ரயில்வே என்ற இலக்கை நோக்கி செல்லும் ரயில்வே துறை : 200 மெகாவாட் திறனுள்ள காற்றாலைகளை நிறுவ ரயில்வே துறை திட்டம்
x
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை குறைப்பதற்காகவும், வெப்பமாதலை தவிர்ப்பதற்காகவும், ரயில்வேத் துறை, 2030-ஆம் ஆண்டில், பசுமை ரயில்வே-வாக மாறுவது என்ற இலக்கை நோக்கி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு, கர்நாடகா,குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், 200 மெகாவாட் திறனுள்ள காற்றாலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 200 மெகா வாட் திறனுள்ள சூரிய மின்சக்தி உபகரணங்களை நிறுவக் கூடிய வகையில் 51 ஆயிரம்  ஹெக்டேர் நிலம் ரயில்வேத் துறை வசம் உள்ளதாகவும்,  காற்றாலை மூலம் மின்சக்தியைத் தயாரிக்கும், 103 மெகாவாட் திறனுள்ள ஆலைகள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் 21 மெகாவாட் திறனுள்ள காற்றாலைகள் ஏற்கனவே தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்