கடத்தல் ராணி ஸ்வப்னா கைது செய்யப்பட்டது எப்படி? - நாகலாந்து செல்ல திட்டமிட்டபோது சுற்றி வளைப்பு

தங்க கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ், நாகலாந்துக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டதாக என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
x
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் விவகாரம் பெரும் பரபரப்பை பற்ற வைத்த நிலையில் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். அவரை அங்கிருந்து தமிழகம் வழியாக சாலைமார்க்கமாக என்ஐஏ அதிகாரிகள் கொச்சிக்கு அழைத்துச் செல்கின்றனர். பிற்பகலுக்கு பிறகு அவர் கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஏற்கனவே கைதான ஷரித், மலப்புரத்தில் கைதான ரமீஸ் ஆகியோரும் கொச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த வழக்கில் முதலமைச்சரின் செயலாளராக இருந்த சிவசங்கரனுக்கு நெருக்கடி அதிகமாகி உள்ளது. ஸ்வப்னாவுடன் அவருக்கு நெருக்கம் இருந்தது உறுதியான நிலையில் அவரை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். அவருடைய வீட்டில் நடத்திய சோதனையில் பல ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியான நிலையில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்