புதுச்சேரி : காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தகுதிநீக்கம்

புதுச்சேரியில் பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேலை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி : காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தகுதிநீக்கம்
x
புதுச்சேரியில் பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேலை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து ஆட்சிக்கு எதிராகவும், முதலமைச்சர், அமைச்சர்களை கடுமையாக விமர்சித்தும் வந்ததால், கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, அரசு கொறடா அனந்தராமன், சபாநாயகரிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், தனவேலுவை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் சிவக்கொழுந்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, பாகூர் தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலர் முனுசாமி அறிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்