பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் மறைவு - புதுச்சேரி முதலமைச்சர், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி

பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மறைந்த தமிழறிஞர் மன்னர் மன்னன் உடலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் மறைவு - புதுச்சேரி முதலமைச்சர், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி
x
பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மறைந்த தமிழறிஞர்  மன்னர் மன்னன் உடலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சபாநாயகர் மற்றும்  சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். 92 வயதான மன்னர் மன்னன் வயது முதிர்வு காரணமாக புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக பெருமாள் கோயில் வீதியில் உள்ள பாவேந்தர் அரசு அருங்காட்சியகத்தில் மன்னர் மன்னன் உடல் வைக்கப்பட்டுள்ளது.தமிழ் அறிஞர்கள் , அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை வைத்திக்குப்பத்தில் உள்ள பாவேந்தர் நினைவிடத்தில் மன்னர் மன்னன் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்