"தேச நலனை காப்பது இந்திய அரசின் தலையாய கடமை" - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி

தேச நலனை காப்பது இந்திய அரசின் தலையாய கடமை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தேச நலனை காப்பது இந்திய அரசின் தலையாய கடமை - மத்திய  அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி
x
தேச நலனை காப்பது இந்திய அரசின் தலையாய கடமை  என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர், கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருந்து சீனா தனது துருப்புக்களை திரும்பப் பெற்றது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், கால்வான் பள்ளத்தாக்கின் இறையாண்மை பற்றிய தெளிவான தகவல்  இடம்பெறாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கால்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில்,  முன்பிருந்த இருந்த நிலையே தொடர வேண்டும் என ஏன் இந்தியா வலியுறுத்தவில்லை? என்றும், நமது மண்ணில் ஊடுருவி, ஆயுதங்களற்ற 20 இந்திய ராணுவ வீரர்களை படுகொலை செய்ததை சீனாவை, தனது நிலைப்பாட்டை  நியாயப்படுத்த அனுமதித்தது ஏன்? எனவும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்