"20 வீரர்கள் உயிரிழந்த நிலையிலும் சீனா, குஜராத் வர்த்தகம் பாதிப்பில்லை" - பா.ஜ.க. மீது காங்கிரஸ் சாடல்

நாட்டின் சீன முதலீட்டின் மையமாக குஜராத் மாநிலம் விளங்கி வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
20 வீரர்கள் உயிரிழந்த நிலையிலும் சீனா, குஜராத் வர்த்தகம் பாதிப்பில்லை - பா.ஜ.க. மீது காங்கிரஸ் சாடல்
x
நாட்டின் சீன முதலீட்டின் மையமாக குஜராத் மாநிலம் விளங்கி வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. ஒருபுறம் மக்களை சீனப் பொருட்களை நிராகரிக்க வலியுறுத்தும் பா.ஜ.க. கட்சி,  அது ஆளும் குஜராத் மாநிலத்தில் அதிகப்படியான சீன முதலீடுகளை ஈர்த்து வைத்துள்ளதாக அக்கட்சி  சுட்டிக்காட்டி உள்ளது. கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் 20 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையிலும், குஜராத் மற்றும் சீனா இடையிலான வர்த்தகத்தில் எந்தவித மாற்றமும் இன்றி வழக்கமான முறையில் வர்த்தக நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா சாடியுள்ளார். மேலும், குஜராத், சீனா இடையே சரக்கு விமான போக்குவரத்து தங்கு தடையின்றி நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டில் சீனா உடன் 43 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, குஜராத் அரசு ஒப்பந்தம் செய்து உள்ளதாகவும், இதில் சீன சிறு, குறு நிறுவனங்களின் குஜராத் தொழிற் பேட்டையும் அடங்கும் என பவன் கேரா சுட்டிக்காட்டி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்