ஏல தோட்ட விவசாயிகளுக்கு இ- பாஸ் பெறுவதில் சிக்கல் : நிபந்தனைகளை விதித்தது இடுக்கி மாவட்ட நிர்வாகம்

ஏலத்தோட்ட விவசாயிகள் கேரளாவில் உள்ள தங்களின் தோட்டத்திற்கு சென்று வர இ பாஸ் பெறுவதற்கு இடுக்கி மாவட்ட நிர்வாகம் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது .
ஏல தோட்ட விவசாயிகளுக்கு இ- பாஸ் பெறுவதில் சிக்கல் : நிபந்தனைகளை விதித்தது இடுக்கி மாவட்ட நிர்வாகம்
x
ஏலத்தோட்ட விவசாயிகள் கேரளாவில் உள்ள தங்களின் தோட்டத்திற்கு சென்று வர இ பாஸ் பெறுவதற்கு இடுக்கி மாவட்ட நிர்வாகம் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது . இ பாஸ் பெற்று வரும்  விவசாயிகள் கேரளாவில் ஏலத்தோட்டத்திலுள்ள  தங்களது வீடுகளில் 14 நாட்கள் வரை தனிமைப்படுத்திக் கொண்ட பிறகே பணிக்கு செல்ல வேண்டும் என்று இடுக்கி மாவட்ட நிர்வாகம் நிபந்தனை விதித்துள்ளது. ஏலக்காய் மின்னணு  வர்த்தகம் நடைபெறும் நாளில் மட்டும்  வியாபாரிகள் கேரளாவிற்கு வந்து செல்ல, ஒரு நாள் மட்டும்  இ-  பாஸ் அனுமதி வழங்கப்படும்  என தெரிவித்துள்ளது. ஏல  விவசாயிகளுக்கு ஒரு நாளுக்கான இ- பாஸ் அனுமதி இல்லை என்று கேரள வருவாய்த் துறை தெரிவித்துள்ளது . இதனால் தேனி மாவட்டத்தைச் சார்ந்த ஏல தோட்ட விவசாயிகள் கேரளாவில் உள்ள தங்களது தோட்டங்களுக்கு செல்ல   இ- பாஸ் பெறுவதில்  சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்