நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு - 24,248

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24 ஆயிரத்து 248 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு - 24,248
x
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24 ஆயிரத்து 248 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

* இதன்படி, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது, 6 லட்சத்து 97 ஆயிரத்து 413 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4 லட்சத்து 24 ஆயிரத்து 433 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 53 ஆயிரத்து 287 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 19 ஆயிரத்து 693 பேர் பலியாகி உள்ளனர்.

* கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில், மொத்தம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 740 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இங்கு 86 ஆயிரத்து 57 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 8 ஆயிரத்து 822 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

* தமிழகத்தை பொறுத்தவரை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து151 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 62 ஆயிரத்து 778 பேர் குணமடைந்துள்ள நிலையில்,  46 ஆயிரத்து 863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை ஆயிரத்து 510 ஆக உள்ளது. 

* தலைநகர் டெல்லியில் 99 ஆயிரத்து 444 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 71 ஆயிரத்து 339 பேர் குணமடைந்து உள்ளனர். 25 ஆயிரத்து 38 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3 ஆயிரத்து 67 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

* குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36 ஆயிரத்து 37 ஆக உள்ளது. இங்கு 25 ஆயிரத்து 892 பேர் குணமடைந்துள்ள நிலையில், 8 ஆயிரத்து 802 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 943 ஆக உள்ளது.

* உத்தர பிரதேசத்தில் 27 ஆயிரத்து 707 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 18 ஆயிரத்து 761 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 8 ஆயிரத்து 161 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 785 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்