"சீனாவில் இருந்து மின்சார உதிரிபாகங்கள் இறக்குமதி இல்லை" - மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் திட்டவட்டம்

சீனாவில் இருந்து மின்துறை உதிரிபாகங்களை இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை என மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.
சீனாவில் இருந்து மின்சார உதிரிபாகங்கள் இறக்குமதி இல்லை - மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் திட்டவட்டம்
x
சீனாவில் இருந்து மின்துறை உதிரிபாகங்களை இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை என மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்தார். காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தங்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும், அனைத்து உதிரிபாகங்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மின்துறை உதிரிபாக இறக்குமதி 71 ஆயிரம் கோடியாக உள்ளதாகவும், அதில் சீனாவில் இருந்து 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மட்டுமே இறக்குமதி செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். எரிசக்தி துறை சுலபமாக தாக்குதலுக்கு ஆளாக கூடிய துறை என்பதால் இந்த விவகாரத்தில் கவனமுடன் இருக்கப் போவதாகவும் ஆர். கே. சிங் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்