நாடு முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டித்து உள்துறை அமைச்சகம் உத்தரவு

நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டித்து உள்துறை அமைச்சகம் உத்தரவு
x
நோய் கட்டுப்பாட்டு பகுதியை தவிர பிற இடங்களில் அனைத்து விதமான பொருளாதார நடவடிக்கைளும் அனுமதிக்க படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பள்ளி கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுவதற்கு விதிக்கப்பட்ட தடை, ஜூலை 31 ஆம் தேதி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள் பார்கள், அரங்கங்கள் போன்றவை திறப்பதற்கு தற்போதுள்ள தடை தொடர்ந்து அமலில் இருக்கும்.பெரிய அளவிலான ஒன்றுகூடல்கள், அரசியல், விளையாட்டு சமூகம், மதம் ,கலாச்சாரம் சார்ந்த ஒன்று கூடல்கள் ஆகியவற்றுக்கான தடை தொடரும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கு அனுமதிக்கப்படும் தளர்வுகள் மேற்பார்வை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும், அந்த நேரத்தில் அத்தியாவசிய தேவைகளை தவிர வெளியில் செல்ல தடை நீடிக்கும்.

அத்தியாவசிய சரக்கு போக்குவரத்து மற்றும் பேருந்துகள் இயக்கம் போன்றவற்றிற்கு இரவு நேரங்களில் தடை இருக்காது.மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலத்திற்குள் சரக்கு  போக்குவரத்திற்கு தடை இல்லை எனவும் இதற்கென தனியாக அனுமதி பெற தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில், வர்த்தக நிறுவனங்களில் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் இடையே போதிய இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் உள்துறை அமைச்ச உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்