டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை முடக்கிய மத்திய அரசு - இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என தகவல்

இந்திய இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குக்கு தீங்கு விளைவிப்பதாக டிக் டாக், ஷேர் இட் உள்ளிட்ட மொபைல் செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.
டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை முடக்கிய மத்திய அரசு - இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என தகவல்
x
ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ் தளங்களில் சில செயலிகள் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக புகார் வந்ததை அடுத்து 59 செயலிகளை தடை செய்வதக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை உத்தரவிட்டுள்ளது. டிஜிட்டல் சந்தையில் இந்தியா முதன்மையான நாடாக இருந்தாலும், 130 கோடி மக்களின் தகவல் பாதுகாப்பு, மற்றும் தனியுரிமைக் கொள்கையைப் பாதுகாப்பது ஆகியவற்றின் அடிப்படையில் தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து செல்போன் மற்றும் செல்போன் அல்லாத இணையதளச் செயலிகளின் பயன்பாடுக்கு இந்தியாவில் முடிவுக்கு வர உள்ளது.

தடை செய்யப்பட்டுள்ள செயலிகளில் டிக் டாக், ஷேர் இட், யூசி ப்ரவுசர், ஹெலோ, வி சாட், பைடு, டியு  ரெக்கார்டர் ஆகியவை இந்தியாவில் அதிக பயனர்களை கொண்டுள்ளன. இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம், மத்திய உள்விவகார அமைச்சகம் ஆகியவையும் சீன செயலிகளை முடக்கப் பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்