திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட் இன்று வெளியீடு
பதிவு : ஜூன் 29, 2020, 02:13 PM
ஜூலை மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் இன்று வெளியிடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் எட்டாம் தேதி முதல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் தினமும் 6 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 9 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் நாளொன்றுக்கு 1000 விஐபி தரிசன டிக்கெட்டுகள் வரை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஜூலை மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் தேவஸ்தனம் இன்று வெளியிடுகிறது. அதேபோல் ஜூலை 1ஆம் தேதிக்கான இலவச தரிசன டிக்கெட் நாளை முதல் திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், அலிபிரி, விஷ்ணு நிவாசம் ஆகிய இடங்களில்  வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு 9 ஆயிரம் சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வரும் நிலையில், இலவச தரிசன டிக்கெட் 6 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருவது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்

தமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு - உச்ச நடிகர்கள் இடையிலான ஒற்றுமைகள்

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்த சவாலை ஏற்று அதை நிறைவேற்றியும் இருக்கிறார், நடிகர் விஜய்.

13 views

கர்நாடகாவில் வெள்ளத்தில் சிக்கிய குரங்குகள் - தனி பாலம் அமைத்து மீட்பு

கர்நாடக மாநிலம் தாவண்கரே மாவட்டத்தில் பாயும் துங்கபத்ரா நதியில் கடந்த 7 நாட்களாக வெள்ளத்திற்கு இடையே மரங்களில் குரங்குகள் சிக்கிக் கொண்டன.

16 views

ஆந்திராவில் 23 லட்சம் பெண்கள் பயன்பெறும் திட்டம் - முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்

ஆந்திரா மாநிலத்தில் பெண் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதன் மூலம் தன்னம்பிக்கை கொள்ள வைக்கும் நோக்கில் 'ஒய்.எஸ்.ஆர் சேயுதா திட்டம் 2020' முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று தொடங்கி வைத்தார்.

84 views

பாட்டு பாடிய வண்ணம் ஜெய்ப்பூர் திரும்பும் ராஜஸ்தான் காங். எம்.எல்.ஏ.க்கள்

ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் எழுந்த புகைச்சல் அடங்கி உள்ள நிலையில் ஜெய்சால்மர் தங்கும் விடுதியில் இருந்து ஜெய்ப்பூர் புறப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பேருந்தில் பாட்டு பாடிய வண்ணம் மகிழ்ச்சி உடன் திரும்பினர்.

19 views

உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணை தொடங்குவது எப்போது? - நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் ஆலோசனை

உச்சநீதிமன்றத்தில் நேரடியாக, வழக்கு விசாரணை மேற்கொள்வது தொடர்பாக நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட குழு பரிசீலித்து வருகிறது.

8 views

கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைப்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 32 ஆயிரத்து 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.