ஜூலை 5 ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு - கர்நாடக அரசு அறிவிப்பு

கர்நாடகாவில், கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஜூலை 5 ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு - கர்நாடக அரசு அறிவிப்பு
x
கர்நாடகாவில், கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.தொற்று பரவலை தடுக்கும் விஷயத்தில்,  மத்திய அரசின் பாரட்டுதலை பெற்றிருந்த நிலையில் அம்மாநிலத்தில்  பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தொற்று பரவலை தடுக்கும் விதமாக வரும் ஜூலை 5 ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.  ஊரடங்கு நேரம் இரவு 9 மணிக்கு பதிலாக, ஜூலை பத்தாம் தேதி முதல் இரவு 8 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை செயல்பாட்டில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. முழு ஊரடங்கின்போது, அத்தியாவசிய பொருட்கள் விற்பனை தவிர வேறு எந்த கடையும் திறந்திருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் சனிக்கிழமை இயங்காது என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்