சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முடிவு - உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

10 மற்றும்12ஆம் வகுப்பு பொதுத் தேர்வர்களுக்கு மதிப்பெண் வழங்கும் சி.பி.எஸ்.இ.யின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முடிவு - உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
x
நடந்துகொண்டிருந்த சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வு, கொரோனா எதிரொலியால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், விடுபட்ட பாடங்களுக்கு மதிப்பெண் வழங்கி, முடிவை வெளியிட சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை முழுமையாக எழுதி முடித்தவர்களுக்கு அதனடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும்- சி.பி.எஸ்.இ. மூன்று பாடங்களுக்கு மேல்தேர்வு எழுதியோருக்கு அவற்றின் மதிப்பெண்களை கூட்டி, கணக்கிடப்படும் சராசரி மதிப்பெண் அனைத்து பாடங்களுக்கும் வழங்கப்படும் என சிபிஎஸ்இ கூறியுள்ளது. 3 பாடங்களுக்கு மட்டும் தேர்வு எழுதியோருக்கு, அதில், அதிக மதிப்பெண் எடுத்த 2 பாட மதிப்பெண்களின் சராசரி மதிப்பெண், மற்ற அனைத்துப் பாடத்துக்கும் வழங்கப்படும் தெரிவித்துள்ளது. 1 அல்லது 2 பாட தேர்வுகளை எழுதி முடித்தவர்களின் அக மதிப்பீடு மற்றும் செய்முறை அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. இந்த முறையிலான மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு ஜூலை 15-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என கூறியுள்ள சி.பி.எஸ்.இ., மதிப்பெண்களை மேம்படுத்தும் வகையில், தேவைப்பட்டால் அனைத்து 12-ஆம் வகுப்பு மாணவர்களும் கட்டாயமற்ற பொதுத் தேர்வை எழுதலாம் என அனுமதி வழங்கியுள்ளது. இந்த கட்டாயமற்ற பொதுத் தேர்வு, கொரோனா கட்டுக்குள் வந்தவுடன் நடத்தப்படும் என்றும், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ. உறுதி தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்