கட்சி, ஆட்சி அதிகாரத்தில் 2 பேர் ஆதிக்கம் ஏன்?" மக்களுக்கு விளக்குமா பா.ஜ.க.? - காங்கிரஸ் கேள்வி

பெரும்பான்மை மக்களின் ஆட்சி என்று சொல்லப்படும் நிலையில் 2 பேர் ஆதிக்கமே மேலோங்கியும், மற்றவர்கள் எல்லாம் அதிகாரமற்றும் இருப்பது ஏன் என ஆளும் பா.ஜ.க. விளக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.
கட்சி, ஆட்சி அதிகாரத்தில் 2 பேர் ஆதிக்கம் ஏன்? மக்களுக்கு விளக்குமா பா.ஜ.க.? - காங்கிரஸ் கேள்வி
x
பெரும்பான்மை மக்களின் ஆட்சி என்று சொல்லப்படும் நிலையில் 2 பேர் ஆதிக்கமே மேலோங்கியும், மற்றவர்கள் எல்லாம் அதிகாரமற்றும் இருப்பது ஏன் என ஆளும் பா.ஜ.க. விளக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. இதுதொடர்பாக பதிவிட்டுள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, குதிரைப் பேரம், கும்பலாக மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.க்களை அக்கட்சியில் இருந்து உடைத்து வெளியேற்றுவது மற்றும் அரசியல் சாசன அமைப்புகளை கைப்பற்றுவது மட்டும் தான் பா.ஜ.க. மரபா என மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். நேரு-காந்தி மீதான வெறுக்கத்தக்க வெறுப்பில் பா.ஜ.க.  ஏன் வெறித்தனமாக இருக்கிறது? என விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்