விண்வெளி துறையில் இந்தியா உருவாக்கிய சொத்துக்கள் - மத்திய அரசின் முடிவுக்கு இஸ்ரோ தலைவர் வரவேற்பு

விண்வெளித் துறையில் இந்தியா உருவாக்கி உள்ள சொத்துக்களை, தனியாரும் பயன்படுத்த, மத்திய அரசு எடுத்துள்ள முடிவை இஸ்ரோ தலைவர் சிவன் வரவேற்றுள்ளார்.
விண்வெளி துறையில் இந்தியா உருவாக்கிய சொத்துக்கள் - மத்திய அரசின் முடிவுக்கு இஸ்ரோ தலைவர் வரவேற்பு
x
விண்வெளித் துறையில் இந்தியா உருவாக்கி உள்ள சொத்துக்களை, தனியாரும் பயன்படுத்த, மத்திய அரசு எடுத்துள்ள முடிவை இஸ்ரோ தலைவர் சிவன் வரவேற்றுள்ளார். நாட்டில் உள்ள முழு தொழில் நுட்பத் திறமையாளர்களும் இதனால் பயன்படுவதுடன், நாட்டின் முழு சக்தியும் பயன்படுத்தப்பட்டு வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன், வருவாயும் அதிகரிக்கும் என சிவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அரசின் இந்த நடவடிக்கை சர்வதேச விண்வெளி பொருளாதாரத்தில் முக்கிய நாடாக விளங்க உதவும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். அரசின் இந்த நடவடிக்கைக்கு, இஸ்ரோ முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்