கேரளாவில் பிரபல நடிகை கடத்தப்பட்ட விவகாரம் : பெண் நீதிபதியை இடமாற்றம் செய்த உத்தரவு ரத்து
பதிவு : ஜூன் 25, 2020, 01:57 PM
கேரளாவில் பிரபல நடிகை கடத்தல் வழக்கு விசாரணையைமேற்கொண்டு வந்த பெண் நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை பாதிப்புக்குள்ளாகும் என காரணம் காட்டி இடமாற்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
கேரளாவில் பிரபல நடிகை கடத்தல் வழக்கு விசாரணையைமேற்கொண்டு வந்த பெண் நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை பாதிப்புக்குள்ளாகும் என காரணம் காட்டி இடமாற்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு, பெண் நீதிபதி ஹணி வர்கீஸ் என்பவரை நீதிபதியாக, நியமித்து உத்தரவிட்டது. வழக்கு நடைபெற்று வந்த நிலையில், வர்கீஸை கோழிக்கோட்டுக்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த இடமாற்ற உத்தரவால்  நடிகையின் கடத்தல்  வழக்கு விசாரணை பாதிப்புக்குள்ளாகும் எனவும் மற்றொரு பெண் நீதிபதியை உடனடியாக நியமிக்க முடியாது எனவும் காரணம் காட்டி ஹணி வர்கீஸின் இடமாற்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது.  ஏற்கனவே இவ்வழக்கின் விசாரணை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் பல்வேறு காரணங்களால் விசாரணை இன்னும் முடிவுக்கு வரவில்லை. நடிகையிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கொரோனா காரணமாக கடந்த இரு மாதங்களுக்கு மேலாக விசாரணை நடைபெறவில்லை.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

779 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

186 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

146 views

பிற செய்திகள்

விகாஸ் துபே என்கவுன்டர் வழக்கு - பாதுகாப்பு கேட்டு கைது செய்யப்பட்ட எஸ்.ஐ மனு

விகாஸ்துபே என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் கே.கே.சர்மா தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளார்.

959 views

தங்க கடத்தல் ராணி ஸ்வப்னா சுரேஷ் ஸ்வப்னாவுடன் இருந்த சந்தீப் நாயரும் கைது

கேரள தங்க கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் நிலையில் ஸ்வப்னா, சந்தீப் நாயர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

211 views

கர்நாடகா : உதவித்தொகை வழங்க கோரி மாணவர்கள் போராட்டம்

கர்நாடகா மாநிலம் தவனகெரேவில் உதவித்தொகை வழங்க கோரி ஜெ.ஜெ.எம். மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

24 views

"இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளதே?" - மோடி ஆட்சி குறித்து ராகுல்காந்தி விமர்சனம்

மோடியின் ஆட்சியில் இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

34 views

நடிகை ரேச்சல் வைட்டுக்கு கொரோனா தொற்று

பிரபல பாலிவுட் நடிகை, ரேச்சல் வைட், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

426 views

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா உறுதி

அமிதாப் பச்சனின் மருமகளும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

321 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.