கொரோனா ஊரடங்கு காலத்தில் போ​லீசாரால் 15 பேர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் : தமிழகம் உட்பட 8 மாநிலங்கள் அறிக்கை அளிக்க உத்தரவு
பதிவு : ஜூன் 25, 2020, 01:49 PM
கொரோனா ஊரடங்கு காலத்தில், காவல் துறையினரால் 15 பேர் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில், காவல் துறையினரால்15 பேர்  அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் கொரோன பரவலை தடுக்க அமலில் உள்ள ஊரடங்கு காலத்தில், 8 மாநிலங்களில் 15 பேர் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் 12 பேர் சாலைகளிலும், 3 பேர் சிறையிலும் அடித்துக் கொல்லப்பட்டு உள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையத்தில், காமன்வெல்த் மனித உரிமைகள் முன்னெடுப்பு அமைப்பு புகார் அளித்துள்ளது. ஆந்திராவில் 5 பேரும், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் தலா 2 பேரும், தமிழகம், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா ஒருவரும் போலீசாரால் உயிரிழந்து உள்ளனர். 
இதுதொடர்பாக, தமிழகம் உள்பட 8 மாநிலங்களி​டம், தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. நாட்டில் கடந்த 2018-19 ஆண்டில் மட்டும் இரண்டாயிரத்து 497 பேர் நீதிமன்ற காவலிலும், 178 பேர் காவல் நிலையத்திலும், 386 போலீசாரை தாக்க முயன்றதான  பெயரில் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை மொத்தம் நான்காயிரத்து 608 சம்பவங்கள்  விசாரிக்கப்பட்டு உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

451 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

110 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

44 views

பிற செய்திகள்

கட்டுமான பொருட்கள் 30 சதவீதம் விலை உயர்வு - மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் கட்டுமான பொருட்கள் விலை உயர்வு காரணமாக கட்டுமான தொழில்கள் முடங்கி உள்ளன.

0 views

20 சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பு - கொரோனா பரவலை கட்டுப்படுத்த போலீஸ் தீவிரம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாநகர் பகுதியில் 20 சோதனை சாவடிகளை அமைத்து தீவிர சோதனை நடைபெறுகிறது.

13 views

கொரோனா பாதிப்பு : "தமிழகத்தில் இறப்பு சதவீதம் குறைவு" - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தகவல்

கொரானா தொற்று பாதிப்பை பொருத்தவரை தமிழகத்தில் இறப்பு சதவீதம் மிக குறைவாக உள்ளதாக அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

8 views

750 படுக்கை வசதிகளுடன் சிறப்பு மருத்துவமனை - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார்

சென்னை கிண்டியில் 750 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவமனை முதலமைச்சர் இன்று காலை திறந்து வைக்கிறார்.

17 views

அதிமுக ஐவர் குழு திடீர் ஆலோசனை

அதிமுகவுக்குள் நிர்வாக ரீதியாக செய்யப்பட உள்ள மாற்றங்கள் குறித்து அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, வைத்தியலிங்கம், கேபி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் அடங்கிய ஐவர் குழு திடீர் ஆலோசனையில் ஈடுபட்டது.

7352 views

மதுரை : வாக்களிக்காதவர்களை துன்புறுத்தும் ஊராட்சி மன்ற தலைவர்?

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டம் செம்பியேனந்தல் ஊராட்சி மன்ற தலைவராக இந்திரா அழகுமலை என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

968 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.