பேச்சுவார்த்தைகளுக்கு பின்னும் படைகளை குவிக்கும் சீனா - எல்லையில் சீனாவின் நடவடிக்கை குறித்த செயற்கைக்கோள் படம்

பேச்சுவார்த்தைகளுக்கு பின்னும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீனா தனது படைகளை குவிப்பத்திருப்பது குறித்த செயற்கைக்கோள் புகைப்பட காட்சி வெளியாகி உள்ளது.
பேச்சுவார்த்தைகளுக்கு பின்னும் படைகளை குவிக்கும் சீனா - எல்லையில் சீனாவின் நடவடிக்கை குறித்த செயற்கைக்கோள் படம்
x
பேச்சுவார்த்தைகளுக்கு பின்னும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீனா தனது படைகளை குவிப்பத்திருப்பது குறித்த செயற்கைக்கோள் புகைப்பட காட்சி வெளியாகி உள்ளது. எல்லையில் நடந்த தாக்குதலைத்தொடர்ந்து, இரு நாட்டு ராணு வ அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, படைகளை வாபஸ் பெற இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த பேசுவார்த்தை நடந்த சில நாளுக்குள் கல்வான் ஆற்றில் கட்டுப்பாட்டுக் கோட்டுப்பகுதியின் இருபுறமும் சீன கட்டமைப்புகள் இருப்பதைக் காட்டும் செயற்கை கோள் படங்கள் வெளியாகி உள்ளன. அதில், சீன ராணுவ கூடாரம் இருப்பது போன்றும்,
தற்காப்பு முகாம்கள், தங்குமிடங்கள் கட்டப்பட்டுள்ளது தெரியவந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், இது குறித்து ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்