சீனாவில் இருந்து இறக்குமதியாகும் சரக்குகளுக்கு கடும் கட்டுப்பாடு

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் சரக்குகளுக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதியாகும் சரக்குகளுக்கு கடும் கட்டுப்பாடு
x
இந்தியா-சீனா எல்லை பிரச்சனையை  தொடர்ந்து,  நாடு முழுவதும் உள்ள விமானநிலையங்கள், துறைமுகங்களை மத்திய அரசு உஷாா் படுத்தியுள்ளது. பன்னாட்டு  விமான நிலையங்களில் உள்ள சரக்கு பிரிவு, தீவிர கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களை வெளியே அனுப்புவதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு உயா் அதிகாரிகள்,  திடீரென சோதனை நடத்தினர். அப்போது,சீனாவில் இருந்து வரும் கண்டெய்னர்கள் முறையாக சோதனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர்

Next Story

மேலும் செய்திகள்