மும்பையில் 24 மணி நேரத்தில் 824 பேருக்கு தொற்று உறுதி...

மும்பையில் கடந்த 40 நாட்களில் இல்லாத அளவாக நேற்று 824 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மும்பையில் 24 மணி நேரத்தில் 824 பேருக்கு தொற்று உறுதி...
x
மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 824 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இது கடந்த 40 நாட்களை ஒப்பிடுகையில் குறைவானது என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று மட்டும் 107 பேர் பலியான நிலையில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மும்பையில் மூவாயிரத்து 844 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 68 ஆயிரத்து 140 ஆக உயர்ந்துள்ள நிலையில், 29 ஆயிரத்து 982 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று அம்மாநிலத்தில் புதிதாக மூவாயிரத்து 214 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 10 ஆக உள்ளது. இதில் 62 ஆயிரத்து 833 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மகாராஷ்டிர சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்