கருநாகத்தை வைத்து மனைவியை கொலை செய்த விவகாரம் - கருநாக முட்டையிலிருந்து பிறந்த பாம்பு குட்டிகள் பிடிப்பு
கேரளாவில் கருநாகத்தை வைத்து மனைவியை, கணவன் கொலை செய்த சம்பவத்தில், கருநாக முட்டையிலிருந்து பிறந்த பாம்புகுட்டிகள், பாம்புச்சட்டை ஆகியவை வனத்துறையினரால் அடையாளம் காணப்பட்டன.
அஞ்சல் பகுதியில் உத்ரா என்ற இளம்பெண்ணை அவரது கணவர் ஜூராஜ் கருநாகப் பாம்பு கடிக்க வைத்து கொலை செய்தார். இந்த விவகாரத்தில் ஜூரஜை வனத்துறையினர் காவலில் எடுத்து விசாரித்தனர். 40 நிமிட வாக்குமூலத்தில் கொலை தொடர்பாக பல தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில், உத்ராவை கொலை செய்ய முட்டையிட்ட நிலையில் காணப்பட்ட கருநாகத்தை பிடித்து வந்ததாகவும், அந்த 12 முட்டைகளில், இரு முட்டைகள் உடைந்ததால், மீதமிருந்த 10 முட்டைகளிலிருந்து கருநாக குட்டிகள் வெளிவந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதோடு உத்ராவை கடித்த கருநாகம் கழற்றிய பாம்பு சட்டை அங்கு இருப்பதாக அவர் கூறினார். இதை அடுத்து, அவற்றை கைப்பற்றி ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, சூரஜின் வனத்துறையினரின் காவல் முடிந்ததால், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Next Story

