"இந்தியாவில் உள்ள பாக். தூதரகத்தில் ஊழியர்கள் 50% குறைப்பு" - மத்திய அரசு அதிரடி முடிவு

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக ஆக குறைக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இந்தியாவில் உள்ள பாக். தூதரகத்தில் ஊழியர்கள் 50% குறைப்பு - மத்திய அரசு அதிரடி முடிவு
x
அண்மையில் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான்  தூதரகத்தில் பணியாற்றும் இரு அதிகாரிகள்,அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு, உளவு வேளையில் ஈடுபட்டதாக திருப்பி அனுப்பப்பட்டனர். அதோடு, பாகிஸ்தான் அதிகாரிகளின் செயல்பாடுகள், வியன்னா ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களுக்கு உட்பட்டு இருப்பதில்லை என இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள மத்திய அரசு,  பாகிஸ்தானிலுள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கையும் பாதியாக குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை அழைத்து மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏழு நாட்களில் இந்த முடிவு செயல்படுத்தப்பட உள்ள நிலையில், தற்போது வரை பாகிஸ்தான் தூதரகத்தில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை 110 என்று இருந்த நிலையில், அது தற்போது,55 ஆக குறையும்.

Next Story

மேலும் செய்திகள்