"வெற்று நிதியுதவி திட்டத்தை அறிவித்த பா.ஜ.க. அரசு" : பிரதமர் நரேந்திர மோடி அரசு மீது சோனியா காந்தி விமர்சனம்

மத்திய அரசு வெற்று நிதியுதவி திட்டத்தை அறிவித்து உள்ளதாக சோனியா காந்தி குற்றச்சாட்டி உள்ளார்.
வெற்று நிதியுதவி திட்டத்தை அறிவித்த பா.ஜ.க. அரசு : பிரதமர் நரேந்திர மோடி அரசு மீது சோனியா காந்தி விமர்சனம்
x
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம், அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. முதலில்,  சீன தாக்குதலில் உயிரிழந்த 20 ராணு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய சோனியா காந்தி, அனைத்து அதிகாரங்களையும் தன்னிடம் பிரதமர் குவித்து கொண்டு, மக்களுக்கு வாக்குறுதிகளை அளித்த பின்னர் தான், நாட்டில் கொரோனா பரவல் முன்பை விட அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டி உள்ளார். மாநிலங்களுக்கு நிதியை கொடுக்காமல், தற்போது தொற்று பரவலுக்கு மாநிலங்கள் மீது பிரதமர் மோடி பழிபோட்டு வருவதாகவும் சாடியுள்ளார். இந்த இக்கட்டான காலத்தில் ஏழைகளின் கைகளுக்கு நேரடியாக கிடைக்கும் வகையில் அரசு பணத்தை வழங்க வேண்டும் எனவும், இந்த நெருக்கடியான சூழலிலும் பெட்ரோல், டீசல் விலையை அரசு தொடர்ந்து உயர்த்தி வருவதையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்