புதிதாக 16 பேருக்கு கொரோனா - புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி
புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 287 ஆக உயர்ந்துள்ளது.
முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு கட்டாயமாக அபராதம் விதிக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளதாக புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காரைக்காலை சேர்ந்த கர்ப்பிணி பெண் உட்பட 16 பேருக்கு கொரோனா இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 287 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 162 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
Next Story

