ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்கள் - மத்திய அரசுக்கு விமானப்படை கோரிக்கை
இந்தியா, சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை தீவிரம் அடைந்து வரும் நிலையில் ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்களை வாங்க மத்திய அரசுக்கு விமானப்படை தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
இந்தியா, சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை தீவிரம் அடைந்து வரும் நிலையில், ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்களை வாங்க மத்திய அரசுக்கு விமானப்படை தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு 272 SU-30 போர் விமானங்கள் வாங்கப்பட உள்ள நிலையில், உடனடியாக ரஷ்யாவிடம் இருந்து 21 மிக் 29 எஸ் மற்றும் 12 SU 30 போர் விமானங்களை வாங்க வேண்டும் என விமானப் படை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. புதிதாக வாங்கப்படும் இந்த விமானங்கள், ஏற்கனவே பல்வேறு விபத்துக்களில் சேதமான விமானங்களுக்கு பதிலாக சேர்க்க உதவும் என கூறப்படுகிறது.
Next Story

