கேரளாவில் நேற்று 75 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

நமது எல்லையில் நாட்டுக்காக போராடி வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் நேற்று 75 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
x
நமது எல்லையில் நாட்டுக்காக போராடி வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவன​ந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீரர்களை இழந்து வாடும்  குடும்பத்தினரின் துக்கத்தில் கேரளாவும் பங்கு கொள்வதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் நேற்று  மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ள நிலையில், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை  இரண்டாயிரத்து 697 ஆக  உயர்ந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆயிரத்து 351 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆயிரத்து 324  பேர் குணமடைந்து இதுவரை வீடு திரும்பி உள்ளதாகவும்  பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்