திருப்பதியில் சீன அதிபருக்கு எதிராக போராட்டம் - ஜி ஜின்பிங் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பு
ஆந்திர மாநிலம். திருப்பதியில் நேற்று மாலை பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் , சீன அதிபரின் உருவ பொம்மையை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர மாநிலம். திருப்பதியில் நேற்று மாலை பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் , சீன அதிபரின் உருவ பொம்மையை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்வால் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில், இந்திய தரப்பில் 20 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், சீன அதிபருக்கு எதிராகவும், சீன பொருள்களை வாங்க வேண்டாமென்றும் ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்களை எழுப்பினர். மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்ற அரசியல் கட்சியினர், கபில தீர்த்தம் அருகே உள்ள அமர் ஜவான் என்ற இடத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Next Story

