திருப்பதி கோயிலில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி - 21 ஆயிரம் பேருக்கு டோக்கன்கள் விநியோகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பதி கோயிலில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி - 21 ஆயிரம் பேருக்கு டோக்கன்கள் விநியோகம்
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த எட்டாம் தேதி முதல் சோதனை முறையில் தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர்வாசிகள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து இன்று முதல் அனைத்து பொது பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதற்காக திருப்பதியில் மூன்று வெவ்வேறு இடங்களில் தரிசன டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன. நாளொன்றுக்கு 3000 டோக்கன்கள் மட்டுமே விநியோகிக்கப்பட இருந்த நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் 21 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட்டன. இவர்கள் இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரை தரிசனம் செய்வார்கள். மேலும் காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்