13 மணி நேர அலைக்கழிப்பு - ஆம்புலன்சில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்

கொரோனா அச்சுறுத்தல் நிலவி வரும் தற்போதைய சூழலில், பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணி தாயை, எந்த மருத்துவமனையும், அனுமதிக்காத நிலையில், 13 மணி நேர அலைக்கழிப்புக்கு பின் தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
13 மணி நேர அலைக்கழிப்பு - ஆம்புலன்சில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்
x
கொரோனா அச்சுறுத்தல் நிலவி வரும் தற்போதைய சூழலில், பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணி தாயை, எந்த மருத்துவமனையும், அனுமதிக்காத நிலையில், 13 மணி நேர அலைக்கழிப்புக்கு பின்  தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. நொய்டா-காஜியாபாத் எல்லை பகுதியை சேர்ந்த 30 வயதான 8 மாத கர்ப்பிணி நீலம் என்ற பெண்ணுக்கு,  திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து அவருடைய கணவர் விஜேந்தர் சிங், ஆம்புலன்ஸ் மூலம்  ஈ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனையில் கொரோனா  தொற்று காரணமாக ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்று வருவதால், படுக்கை வசதி இல்லை என்பதை காரணம் காட்டி, மருத்துவமனை நிர்வாகம் தட்டிக்கழித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அங்கும் பிரசவத்துக்கு அனுமதிக்க வில்லை. வலியும், வேதனையோடும் துடித்த மனைவியை, ஆம்புலன்சில் தூக்கிக்கொண்டு, விஜேந்தர் சிங், பல அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் படியேற முயன்றபோது, அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

சுமார் 13 மணி நேரம் அலைந்து பின்னர், ஒரு மருத்துவமனை கூட கருணை காட்டவில்லை. பிரசவ வலியால் துடித்த அந்த இளம் பெண்ணின் உயிர், கணவர் கையில், ஆம்புலன்சிலேயே பிரிந்தது.
மருத்துவர்கள் இல்லாமல் பிறந்த சிசுவும், பூமியை பார்க்காமலேயே உயிரை விட்டது

இந்த சம்பவம் பெரு​ம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் ​விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா பல மனிதர்களின் உண்மையான முகத்திரையை வெளிப்படுத்தி வரும் நிலையில், இன்னும் எத்தனை சாமானிய மக்கள் உயிர்கள் பறிபோகுமோ என்ற அச்சம் அடித்தட்டு மக்களிடையே மேலோங்கி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்