வெளிமாநில பக்தர்கள் சபரிமலை செல்ல கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் - கேரள தேவசம் போர்டு அமைச்சர்

வெளிமாநில பக்தர்கள் சபரிமலை செல்ல கோவிட்19 நெகட்டீவ் சான்றிதழ் கட்டாயம் எடுத்து வர வேண்டும் என்று தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்துள்ளார்.
வெளிமாநில பக்தர்கள் சபரிமலை செல்ல கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் - கேரள தேவசம் போர்டு அமைச்சர்
x
சபரிமலை வரும் பக்தர்களுக்கு நிலக்கல், பம்பையில் தெர்மல் ஸ்கேன் செய்யப்படும் என்றும், 50 பக்தர்கள் மட்டுமே ஒரே நேரத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்று​ம் அவர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும்14-ம் தேதி சபரிமலை நடை திறக்கும் போது கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார். வண்டிப்பெரியாறு வழியாக பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும், கொரோனா பரிசோதனை இல்லை என்ற சான்றிதழுடன் வரும் வெளி மாநில பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்