"புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி பட்டியல்" - இன்று விரிவான பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

புலம் பெயர்ந்த தொழிலாளர் வழக்கில் மத்திய அரசு இன்று விரிவான பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி பட்டியல் - இன்று விரிவான பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்
x
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒரு கோடியே 63 லட்சம் உணவு பொட்டலம், 2 கோடியே 10 லட்சம் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டு உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு  தாக்கல் செய்துள்ள விரிவான பிரமாண பத்திரத்தில் இடம் பெற்றுள்ளது.நெடுஞ்சாலைகளில் நடந்து சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய உதவியுடன் போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.அருகிலுள்ள ரயில் நிலையங்களுக்கு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை கொண்டு சென்று விட்டதாகவும் பிரமாணப் பத்திரத்தில்  மத்திய அரசு தெரிவித்துள்ளது.புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவைப்படும் போது எல்லாம் உணவு, குடிநீர், மருந்துப் பொருட்கள், உடைகள், காலணிகள் இலவசமாக வழங்கப்பட்டதாகவும் அதில் இடம் பெற்றுள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஜூன் 1 முதல் உணவு, குடிநீரை மாநில அரசுகள் மற்றும் ரயில்வே துறை  இலவசமாக வழங்கி வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Next Story

மேலும் செய்திகள்