கரையை கடந்தது "நிசர்கா புயல்" : ஹரிஹரேஸ்வர் - டாமன் இடையே, கரையை கடந்தது

அரபிக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற்ற நிசர்கா புயல், மும்பை அலிபாக் அருகே ஹரிஹரேஸ்வர் - டாமன் இடையே கரையை கடந்தது.
கரையை கடந்தது நிசர்கா புயல் : ஹரிஹரேஸ்வர் - டாமன் இடையே, கரையை கடந்தது
x
அரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து புயலாக மாறியது. நிசர்கா என பெயரிடப்பட்ட இந்த புயல், மும்பையின், அலிபாக் அருகே, ஹரிஹரேஸ்வர் மற்றும் டாமன் இடையே, பிற்பகல் ஒரு மணி அளவில் கரையை கடக்க துவங்கியது. அப்போது  அலிபாக், மும்பை, ரத்னகிரி உள்ளிட்ட இடங்களில், சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. மும்பை, கோவா  கடற்பகுதிகளில் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டது. பிற்பகல் ஒரு மணியளவில், துவங்கி சுமார் நான்கரை மணி அளவில், நிசர்கா புயல் கரையை கடந்தது.

பாந்திரா - வர்லி இடையே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பையிலிருந்து புறப்படும் விமானங்களின் சேவை இரவு 7 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.தானே, ராய்காட், பால்கர், ரத்னகிரி, சிந்துதுர்க் உள்ளிட்டவை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் உடனடியாக நிவாரண பணிகளை மேற்கொள்ள அந்த மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்