கொரோனா பரிசோதனை - மத்திய அரசின் புதிய திட்டம்

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரிசோதனை வசதிகளை உருவாக்க மத்திய அரசு திட்டங்களை வகுத்து வருகிறது.
கொரோனா பரிசோதனை - மத்திய அரசின் புதிய திட்டம்
x
நாடு முழுவதும் பரிசோதனைகளை அதிகப்படுத்தும் வகையில், பரிசோதனை மற்றும் தொகுப்பு மண்டலங்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக விதிமுறைகள்படி அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுக்கூடங்கள் பரிசோதனை மையங்களாக செயல்பட்டு வருகின்றன. சென்னை உட்பட 19 நகரங்களில் மண்டலத் தொகுப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் மத்திய - மாநில அரசு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதுடன், பரிசோதனை முடிவுகளை நாள்தோறும் மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு அளித்து வருகின்றன. இந்த பணிகளில் நூறு அமைப்புகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்த நான்கு வாரங்களில் பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்