வெட்டுக்கிளி படையெடுப்பு - விமான துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

வெட்டுக்கிளி திரள் அதிகம் உள்ள இடங்களில் விமானம் பறக்கும் செயல்பாடுகளை குறைத்து கொள்ள வேண்டும் என விமானத்துறை அமைச்சகம் கேட்டுககொண்டுள்ளது.
வெட்டுக்கிளி படையெடுப்பு - விமான துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
x
வெட்டுக்கிளி திரள் அதிகம் உள்ள இடங்களில் விமானம் பறக்கும் செயல்பாடுகளை குறைத்து கொள்ள வேண்டும் என விமானத்துறை அமைச்சகம் கேட்டுககொண்டுள்ளது. இதுதொடர்பாக விமான நிறுவனங்களுக்கு விமானத்துறை அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது. இந்தியாவில் வெட்டுக்கிளி அதிக அளவில் படையெடுத்து வருவதாகவும்,  காற்றின் திசையை நோக்கி நாள் ஒன்றுக்கு 200 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யும் ஆற்றல் கொண்டவை என்றும், கடல்மட்டத்தில் இருந்து 2000 மீட்டர் உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வெட்டுக்கிளி திரள் அதிகம் உள்ள இடங்களில் விமானம் பறக்கும் செயல்பாடுகளை குறைத்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதிக வெட்டுக்கிளி திறல்கள் விமானத்தின் கண்ணாடி பகுதியை தாக்கும் போது, விமான ஓட்டுநரின் பார்வையை  மறைக்க நேரிடும்.என்றும், அதே நேரத்தில், வைப்பர் உபயோகத்தினை இயக்க பைலட் யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வெட்டிகிளி திரள் அதிகம் உள்ள நிலவரங்களை விமானத்தின் புறப்பாடு மற்றும் வருகையின் போது கட்டுப்பட்டு அறையில் இருந்து விமானிக்கு தெரிவிக்க வேண்டும் எனறும அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்