தீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிப்பு - உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி பெருமிதம்
பதிவு : மே 28, 2020, 08:13 PM
கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தியதை போல புல்வாமாவில், ஒரு பயங்கர தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்ட நிலையில், அதனை பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி உள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தியதை போல புல்வாமாவில், ஒரு பயங்கர தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்ட நிலையில், அதனை பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி உள்ளனர். 

இதே போன்ற ஒரு தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிய ராணுவம் தனது நடவடிக்கையை தீவிரப்படுத்தியது.

40 முதல் 45 கிலோ வெடி மருந்துகளுடன் ஒரு கார் வருவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

போலி பதிவு எண் கொண்ட அந்த கார் சோதனை சாவடியை அடைந்த போது, போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். 

ஆனால், அந்த காரை ஓட்டி வந்த நபர் நிறுத்தாமல் சென்ற நிலையில், போலீசார் துப்பாக்கியால் காரை நோக்கி சுட்டுள்ளனர்.

இதில் அந்த காரை இயக்கி வந்த ஓட்டுநர் தப்பியுள்ளார். இதனையடுத்து, வெடிகுண்டு காரை பின்னர் பாதுகாப்பு படையினர் வெடிக்கச் செய்துள்ளனர். இதில் அந்த பகுதியில் இருந்த பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன.  

அந்த காரை ஓட்டிய நபர் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதி என்றும், அவருக்கும், கடந்தாண்டு தற்கொலை​ப்படை கார் தாக்குதல் நடத்திய அமைப்பிற்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்துள்ளார். 

இரவு முழுவதும் அந்த காரை கண்காணித்து வந்ததோடு, அப்பகுதியில் உள்ள மக்களை அப்புறப்படுத்திய பின்னரே, வெடி மருந்து இருந்த காரை, தகர்த்ததாக ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேச டி.ஜி.பி.  தில்பாக் சிங் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, காஷ்மீர் போலீஸ், சி.ஆர்.பி.எப். மற்றும் ராணுவத்தினர் இணைந்து உரிய நேரத்தில் எடுத்த நடவடிக்கையால், மிகப்பெரும் தாக்குதல் சம்பவம் தவிர்க்கப்பட்டு உள்ளதாகவும், பாதுகாப்பு படையினரின் இந்த நடவடிக்கையை குறித்து ஒட்டு மொத்த நாட்டு மக்களும் பெருமிதம் கொள்வதாகவும் உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தாவி நதி வெள்ளத்தில் சிக்கிய இருவர் மீட்பு

ஜம்முவில் உள்ள தாவி நதியில் கரைபுரளும் வெள்ளத்தில் சிக்கிய இருவரை போலீசார் படகு மூலம் பத்திரமாக மீட்டனர்.

10 views

பிற செய்திகள்

பெண்களுக்கு சம உரிமை - தீர்ப்பு எதிரொலி - கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும்

மகள்களுக்கும் பரம்பரை சொத்தில் சம பங்கு உண்டு என்ற தீர்ப்பு குடும்ப நிர்வாகத்தின் கீழ் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதும் தாக்கம் ஏற்படும் என்று கருதப்படுகிறது.

3 views

தமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு - உச்ச நடிகர்கள் இடையிலான ஒற்றுமைகள்

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்த சவாலை ஏற்று அதை நிறைவேற்றியும் இருக்கிறார், நடிகர் விஜய்.

14 views

கர்நாடகாவில் வெள்ளத்தில் சிக்கிய குரங்குகள் - தனி பாலம் அமைத்து மீட்பு

கர்நாடக மாநிலம் தாவண்கரே மாவட்டத்தில் பாயும் துங்கபத்ரா நதியில் கடந்த 7 நாட்களாக வெள்ளத்திற்கு இடையே மரங்களில் குரங்குகள் சிக்கிக் கொண்டன.

16 views

ஆந்திராவில் 23 லட்சம் பெண்கள் பயன்பெறும் திட்டம் - முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்

ஆந்திரா மாநிலத்தில் பெண் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதன் மூலம் தன்னம்பிக்கை கொள்ள வைக்கும் நோக்கில் 'ஒய்.எஸ்.ஆர் சேயுதா திட்டம் 2020' முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று தொடங்கி வைத்தார்.

89 views

பாட்டு பாடிய வண்ணம் ஜெய்ப்பூர் திரும்பும் ராஜஸ்தான் காங். எம்.எல்.ஏ.க்கள்

ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் எழுந்த புகைச்சல் அடங்கி உள்ள நிலையில் ஜெய்சால்மர் தங்கும் விடுதியில் இருந்து ஜெய்ப்பூர் புறப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பேருந்தில் பாட்டு பாடிய வண்ணம் மகிழ்ச்சி உடன் திரும்பினர்.

19 views

உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணை தொடங்குவது எப்போது? - நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் ஆலோசனை

உச்சநீதிமன்றத்தில் நேரடியாக, வழக்கு விசாரணை மேற்கொள்வது தொடர்பாக நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட குழு பரிசீலித்து வருகிறது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.