பெங்களூரில் சர்ச்சைக்குரிய சாவர்க்கர் பாலம் திறப்பு ரத்து...

பெங்களூரில் சாவர்க்கர் பெயரில் கட்டப்பட்ட சர்ச்சைக்கு உள்ளான பாலம் இன்று திறக்கப்பட இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் சர்ச்சைக்குரிய சாவர்க்கர் பாலம் திறப்பு ரத்து...
x
பெருங்களூருவின் எலகங்கா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் விஸ்வநாத் தொகுதியில் கட்டப்பட்ட இந்த பாலத்திற்கு வீர் சாவர்க்கர் பாலம் என பெயரிடப்பட்டுள்ளதால், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்து வந்தன. பாலம் சாவர்க்கரின் பிறந்தநாளான இன்று திறக்கப்பட இருந்த‌ நிலையில், தற்காலிகமாக பாலம் திறப்பு நிகழ்ச்சி ரத்தாகியுள்ளது. மக்கள்அதிக அளவில் கூடுவதை தவிர்க்கும் விதமாகவே பாலம் திறப்பு தள்ளிப்போயுள்ளதாக கூறியுள்ள பாஜக செய்தி தொடர்பாளர் பிரகாஷ், விரைவில் சாவர்க்கர் பெயரிலே பாலம் திறக்கப்படும் என்று உறுதி பட கூறியுள்ளார். திப்பு ஜெயந்தி விழாவிற்கு ஒருபுறம் தடை விதிக்கும் பாஜக, மறுபுறம் சாவர்க்கர் பெயரில் மேம்பாலம் திறக்க முயற்சிப்பதை வன்மையாக கண்டிப்பதாக மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் செய்தி தொடர்பாளர் அறிவழகன் கூறியுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்