கேரளாவில் மதுபானம் வாங்குவதற்கு மொபைல் செயலி - வாடிக்கையாளர்களிடம் பதிவுக் கட்டணம் வசூலிக்க முடிவு

மதுபானம் வாங்குவதற்கு மொபைல் செயலியை அறிமுகம் செய்வதற்கு கேரள அரசு முடிவு செய்துள்ளது.
கேரளாவில் மதுபானம் வாங்குவதற்கு மொபைல் செயலி - வாடிக்கையாளர்களிடம் பதிவுக் கட்டணம் வசூலிக்க முடிவு
x
மொபைல் செயலி மூலம் மது விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக கேரள மாநில தொழிலாளர் மற்றும் கலால் துறை அமைச்சர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.  திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மதுபான கடைகளில் சென்று மதுபானம் வாங்குவதற்கு  மொபைல் செயலியில் பதிவு செய்ய வேண்டும் என விளக்கினார். ஆன்லைன் மூலம் பதிவு செய்து, வீடுகளுக்கே  கொண்டு சென்று மதுபானம் வழங்கும் திட்டம் அரசுக்கு இல்லை என தெளிவுபடுத்தினார். ஒருவர் 5 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே மது வாங்க முடியும் எனவும், பதிவு செய்யாதவர்களுக்கு மது விற்பனை கிடையாது எனவும் தெரிவித்தார்.  மொபைல் செயலி பதிவு உள்ளிட்ட செலவுகளுக்காக ஒவ்வொரு வாடிக்கையாளரிடம் இருந்தும், கூடுதலாக 50 காசுகள் வீதம் வசூலிக்க அரசு முடிவு செய்துள்ளதாக ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்