120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் - மீட்கும் பணிகள் தீவிரம்

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் - மீட்கும் பணிகள் தீவிரம்
x
மேடக் மாவட்டத்தில், போச்சனபள்ளி என்கிற கிராமத்தில் விவசாய நிலத்தில் போடப்பட்ட 3 ஆழ்துளை கிணறுகளை மூடும் பணிகள் நடைபெற்றுள்ளன. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சாய் என்கிற  3 வயது சிறுவன் எதிர்பாராத விதமாக 120 அடி கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.  இதனையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு,  குழந்தையை மீட்கும் பணியில் நடைபெற்று வருகின்றன. குழந்தை 25 அடி ஆழத்தில் இருக்கலாம் என கூறப்படும் நிலையில், 
முதற்கட்ட முயற்சியின்போது, மண்சரிவு காரணமாக குழந்தை கீழே இறங்கியதாக கூறப்படுகிறது. குழந்தை சுவாசிப்பதற்கு ஏற்ப ஆக்சிஜன் குழாய் அனுப்பப்பட்டுள்ள நிலையில், பக்கவாட்டு பகுதியில் பள்ளம் தோண்டி மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணறு 120 அடி ஆழம் என்பதால், ஹைதராபாத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்