சீனா, இந்தியா இடையே போர் மூளும் அபாயம் - இந்திய எல்லையில் படைகளை குவித்து வரும் சீனா

இந்தியா, சீனா இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.
சீனா, இந்தியா இடையே போர் மூளும் அபாயம் - இந்திய எல்லையில் படைகளை குவித்து வரும் சீனா
x
ஜம்மு  காஷ்மீரின் லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை எதுவரை என்பதில் இந்தியா- சீனா இடையே பிரச்சினை நிலவி வருகிறது. 

இந்த பகுதியில் தான் தற்போது சீனா படைகளை குவித்து வருகிறது. இதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியாவும்  படைகளை குவித்து வருகிறது. 

நேபாள எல்லையில் இந்தியா அமைத்த சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீனா ராணுவ நடவடிக்கை  எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும்  சாலை அமைக்கும் பணியை தடுக்க முடியாது என இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. 

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸால், உலகமே ஸ்தம்பிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உலக  நாடுகள், சீனா  மீதும் கடும் கோபத்தில் இருந்து வரும் நிலையில, அமெரிக்கா நேரடியாக சீனா மீது விசாரணை நடத்த, உலக சுகாதார அமைப்பை வலியுறுத்தியது. இந்தியா உள்ளிட்ட நாடுகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தன. 

இந்த சூழ்நிலையை தனக்கு  சாதகமாக்கிக் கொண்டு, இந்தியாவுக்கு ராணுவ ரீதியாக  நெருக்கடி கொடுத்து,  கொரோனா விசாரணையில் இருந்து தப்பிக்க அந்நாடு முயல்வதாக, பாதுகாப்பு வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்