கொரோனா மாதிரி பரிசோதனை தீவிரம் - தினமும் 1.1 லட்சம் மாதிரிகள் பரிசோதனை

கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தினமும் 1 லட்சத்து ஓராயிரம் எண்ணிக்கையிலான ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கொரோனா மாதிரி பரிசோதனை தீவிரம் - தினமும் 1.1 லட்சம் மாதிரிகள் பரிசோதனை
x
கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தினமும் 1 லட்சத்து ஓராயிரம் எண்ணிக்கையிலான ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த கவுன்சில்  இயக்குனரான மருத்துவர் பல்ராம் பார்கவா கூறும்போது, கடந்த சில மாதங்களாக  கொரோனா பரிசோதனை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளார். தற்போது  612 ஆய்வகங்களில் சோதனை நடப்பதாகவும், இதில் 182 தனியார் ஆய்வகங்களும் அடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை  கடுமையான நிபந்தனைகளின் கீழ் பயன்படுத்த பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்