"ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை கப்பல் மூலம் மீட்போம்" - மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை கப்பல் மூலமாக மீட்கும் பணி ஜூன் மாதம் தொடங்கும் என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை கப்பல் மூலம் மீட்போம் - மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
x
ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை கப்பல் மூலமாக மீட்கும் பணி ஜூன் மாதம் தொடங்கும் என, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 173 விமானங்கள், மூன்று கப்பல்கள் மூலம், 34 நாடுகளிலிருந்து இந்தியர்களை மீட்டுள்ளதாக கூறியுள்ளார். மே 17 முதல் ஜூன் 13ஆம் தேதி வரையான வந்தே பாரத்தின் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், பணிகள் நடைபெற்று வருகிறது என்றும், சுமார் 60 நாடுகளில் இருந்து ஒரு லட்சம் இந்தியர்களை மீட்டுக் கொண்டுவரும் பணி நடைபெற்று வருவதாகவும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்